ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Xiaomi-5,250 பேர் பணிநீக்கம்!!

December 21, 2022 at 6:35 am
pc

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கப் போகிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சேவை வணிகங்களின் பல பிரிவுகள் பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளன. சுமார் 5,250 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் (35,314) 15 சதவீதம் ஆகும். 

இந்த முடிவு புதிதாக பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அமேசான், கூகுள், ஜொமாட்டோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website