எச்சரிக்கை பதிவு!! மீண்டும் மீண்டும் தண்ணீரை சூடாக்கி குடிக்கிறீர்களா?
சூடான தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குளிர்காலத்தில் இது மிகவும் முக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து மீண்டும் கொதிக்க வைப்பதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், தண்ணீரில் உள்ள நன்மை பயக்கும் நைட்ரேட்டுகள் கேன்சர், லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற நோய்களை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளாக மாறும் என்று கூறப்படுகிறது. எனவே, தண்ணீரை சூடாக்கிய உடனேயே குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.