எச்சரிக்கை!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று-ஒரே நாளில் 256 பேருக்கு பரவிய கொரானா..

December 23, 2023 at 10:21 am
pc

திருவனந்தபுரம், மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால் கேரளாவில் ஒரே நாளில் 265 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 2019-ம் ஆண்டு தோன்றி 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், கொரோனா சீசனாகவே மாறி விட்டது. அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஒமைக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக அதிகரித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லி அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website