எந்த வயதினர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

September 15, 2022 at 2:54 pm
pc

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு மனிதர்களுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். ஒருவர் நிம்மதியான தூக்கம் பெறவில்லை என்றால், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெரும்பாலும் பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு, இரவு நேரம் வந்தவுடன் தூங்க சென்று விடுவோம்.

ஆனால், இன்றைய கால கட்டத்தில் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும், வீட்டில் இருந்து வேலை (ஒர்க் பிரம் ஹோம்) செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தை அதிகரித்துள்ளது.இதனால் தூங்கும் நேரத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

பொதுவாக தூக்கம் ஒருவரின் வாழ்கை முறை பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. ஒருவர் அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, மன அழுத்தம், பொருளாதார சிக்கல், காபி மற்றும் தேநீரை அதிக அளவில் பருகுவது போன்றவை நாம் தூக்கம் தொலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பொதுவாக தூக்கம் ஒருவரின் வாழ்கை முறை பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. ஒருவர் அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, மன அழுத்தம், பொருளாதார சிக்கல், காபி மற்றும் தேநீரை அதிக அளவில் பருகுவது போன்றவை நாம் தூக்கம் தொலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

14 முதல் 17 வயதுடைய நபர்கள் 8 முதல் 10 மணி நேரமும், 18 முதல் 25 வயதுடைய நபர்கள் 7 முதல் 9 மணி நேரமும் தூங்குவது அவசியமாகும். 

26 வயதிற்கு மேல் 64 வயது வரை உள்ளவர்கள் தினமும் 7முதல் 8 மணி வரை தூங்கலாம்.  

​தூக்கத்தை மேம்படுத்த உதவும் குறிப்புகள்:

 பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். அதிக நேரம் தூங்குவது இரவில் துக்கத்தை கெடுக்கும்.

தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்தால் அசதி காரணமாக இரவில் நல்ல தூக்கம் வரும்.

ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது அவசியம். அதாவது, வழக்கமான தூக்க நேரத்தை பின்பற்றவும்.

தூங்குவதற்கு வசதியான சூழல் அவசியம். வசதியான வெப்பநிலையில் இருண்ட அறையில் தூங்குவது உங்களுக்கு தூங்க உதவும். 

தூக்கத்தை மேம்படுத்த மென்மையான இசையை கேட்கலாம். இருப்பினும், செல்போன், டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பயன்பாடு தவிர்க்க வேண்டும்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website