‘எனக்கு 35 வயசுதான்’…75 இல்ல: புறக்கணிக்கப்பட்ட இந்திய வீரர் கண்ணீர்: கொதிக்கும் ரசிகர்கள்…பெரும் பரபரப்பு!

August 25, 2022 at 10:59 am
pc

செம்படம்பர் மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து ஏ அணி மூன்று போட்டிகள் கொண்ட கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்), மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.

இந்த அணியில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. போட்டிகள் பெங்களூர், சென்னை நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய ஏ அணிக்கு ஷுப்மன் கில்தான் கேப்டனாக இருப்பார் என முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், 32 வயதாகும் பிரியங் பாஞ்சல்தான் கேப்டனாக இருப்பார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரீகர் பத், குல்தீப் யாதவ், ராஜத் படிதர் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், யாஷ் தயாள் போன்றவர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருப்பதால், இந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிப்பு:

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் ஷெல்டோக் ஜாக்சனின் பெயர் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இவர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து, சிறந்த முறையில் கேட்ச்களை பிடித்து பலரது கவனத்தை பெற்றார். மேலும், பேட்டிங்கிலும் ஓரளவுக்கு சிறப்பாகத்தான் செயல்பட்டார்.

இவருக்கு இந்த இந்திய ஏ அணியில் ஸ்ரீகர் பரத்துடன் இவருக்கும் விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் முன்பு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பரத்துடன் உபேந்திர யாதவ் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி ரசிகர்கள் ஜாக்சன் புறக்கணிப்புக்கு கடும் அதிருப்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஜாக்சன் ட்வீட்:

இந்நிலையில் ஜாக்சனும், ட்விட்டர் பதிவு மூலம் தனது அதிருப்தியை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், ‘‘என்னால் தொடர்ந்து 3 வருடங்கள்வரை எவ்வித ஓய்வும் இன்றி கிரிக்கெட் விளையாட முடியும். எனது திறமையை பார்த்து எனக்கு வாய்ப்பு கொடுங்கள். வயதை ஏன் பார்க்கிறீர்கள். ‘நீ சிறந்த வீரர்தான். ஆனால், வயதாகிவிட்டது’ என பலர் கூறுவதை கேட்க முடிகிறது. எனக்கு 35 வயதுதான். 75 வயது கிடையாது” என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

இந்திய ஏ அணி: பிரியங்க் பஞ்சால் (கே), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ். பாரத் (WK), உபேந்திர யாதவ் (WK), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website