என்னையும், கமல் ஹாசனையும் விட மிகச்சிறந்த நடிகர் மோடி தான்: பிரகாஷ் ராஜ் கிண்டல்

November 15, 2023 at 6:26 pm
pc

இந்திய பிரதமர் மோடி மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர் என அனைத்தையும் வைத்திருப்பதால் அவர் தான் மிகச்சிறந்த நடிகர் என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். 

பிரகாஷ் ராஜ் 

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பையும் தாண்டி பல சமூக விடயங்களுக்கு குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

முக்கியமாக, இந்தியா பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்தவகையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மோடி குறித்து பிரகாஷ் ராஜ் பேசிய கருத்து வைரலாகி வருகிறது.

மோடி சிறந்த நடிகர்

பிரகாஷ் ராஜ் பேசிய நேர்காணலில் “நடிகர் கமல்ஹாசனும், நீங்களும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோல்வி அடைந்திருக்கிறீர்கள் என்றால், உங்களை விட மிகச்சிறந்த நடிகர்கள் அரசியலில் உள்ளனரா” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “பிரதமர் நரேந்திர மோடி தான் மிகச்சிறந்த நடிகர். மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருப்பதால் சிறந்த நடிகர் மோடி தான்” என்று கூறியுள்ளார். 

தற்போது, பிரகாஷ் ராஜ் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், கமல் ஹாசன் நல்ல தலைவர் கிடையாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website