“என் அன்பிற்கினிய சகோதரர் விஜயகாந்த்” மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

December 28, 2023 at 7:09 pm
pc

தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானதை தொடர்ந்து அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இரங்கல்

இந்நிலையில் சக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விஜயகாந்த் உயிரிழப்பிற்கு இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார். X தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”. என கமல்ஹாசன் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website