என் தாயை தூக்கில் போடுவதை பார்க்க ஆசையாக இருக்கிறேன் – இளைஞன் கூறும் பகீர் செய்தி!

November 8, 2023 at 7:10 am
pc

தன் தாய், தன் தந்தையைக் கழுத்தறுத்துக் கொல்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தான் அந்தச் சிறுவன். இன்று அவன் ஒரு இளைஞன். என் தாயை தூக்கில் போடுவதை பார்க்க ஆசையாக இருக்கிறேன் என்று கூறுகிறான் அவன். அந்த இளைஞனுடைய பெயர் அர்ஜூன் சிங். 2016ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் Derbyயைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் (38), தன் கணவரான சுக்ஜீத் சிங்கிடம் இந்தியாவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறைக்குச் செல்லலாம் என்று அழைக்க, அதன் பின்னாலுள்ள சதியை அறியாமல் சுக்ஜீத் சிங்கும், மனைவி பிள்ளைகளுடன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

இந்தியா வந்த ரமன்தீப் கௌர் தன் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்த பிரியாணி சமைத்துக்கொடுக்க, குடும்பத்தினர் பிரியாணியை ரசித்து சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் தெரியாது, அந்த பிரியாணியில் ரமன்தீப் கௌர் தூக்க மாத்திரிகைகளைக் கலந்திருக்கிறார் என்பது.

அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, நள்ளிரவில் தன் ரகசிய காதலனான குர்பிரீத் சிங்கை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் ரமன்தீப் கௌர். இருவரும் சேர்ந்து சுக்ஜீத் சிங்கைக் கொன்றுவிட்டார்கள்.

ஆனால். ரமன்தீப் கௌர் சமைத்த பிரியாணியை அவரது 9 வயது மகனான அர்ஜூன் சாப்பிடவில்லை. ஆகவே, பெற்றோரின் படுக்கையறையில் ஏதோ சத்தம் கேட்க, அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த அர்ஜூன், தன் தாய் தன் தந்தையின் நெஞ்சின் மீது உட்கார்ந்து அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதையும், குர்பிரீத் சிங் தன் தந்தையின் தலையில் சுத்தியலால் அடித்ததையும், பிறகு தன் தாய் கத்தியால் தன் தந்தையின் கழுத்தை அறுத்ததையும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான்.

பின்னர், அர்ஜூன் அளித்த சாட்சியத்தின் பேரிலேயே ரமன்தீப் கௌரும், குர்பிரீத் சிங்கும் கைது செய்யப்பட்டார்கள்.

அப்படி கொலை செய்யப்பட்ட, அந்த சுக்ஜீத் சிங்கின் மகன்தான் இந்த அர்ஜூன் சிங். தன் தந்தையைக் கொலை செய்த தன் தாயை பொலிசில் சிக்கவைக்க உதவியதில் தான் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஷாஜஹான் மாவட்ட நீதிமன்றத்தில் அர்ஜூன் கூறிய சாட்சியம், அவரது தாயாகிய ரமன்தீப் கௌருக்கு மரண தண்டனை விதிக்கப்பட உதவியது.

என் தாய் தூக்கிலிடப்படுவதை பார்க்க ஆசையாக இருக்கிறேன் தற்போது 17 வயதாகும் அர்ஜூன் சிங், தன் தாயாகிய ரமன்தீப் கௌர் மீது தனக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும், அவர் இந்தியாவில் தூக்கிலிடப்படுவதை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

அவரை தூக்கில் போடும்போது, நான் அங்கு இருக்க விரும்புகிறேன் என்று கூறும் அர்ஜூன் சிங், அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையில், அது எனக்கு நிறைய திருப்தியையும் நிம்மதியையும் தரும், அந்த நாளை நான் எதிர்நோக்குகிறேன். அத்துடன், அவர் தூக்கிலிடப்படும்போது, எனது குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்கிறார்.

என் தந்தைக்கு நீதி கிடைப்பதை என் கண்களால் பார்க்க விரும்புகிறேன் என்று கூறும் அர்ஜூன், அவர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்தான், ஏனென்றால், அவர் அப்படி ஒரு மோசமான செயலைச் செய்துள்ளார் என்கிறார்.

அவர் எங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார், ஆனால் நனோ என் தம்பி ஆரோனோ அவற்றைப் படிப்பதில்லை. அவற்றைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிடுகிறோம் என்று கூறும் அர்ஜூன் சிங், எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பறித்துச் சென்ற பெண்ணைக் குறித்து எங்களுக்கு என்ன இருக்கிறது என்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website