எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன் நான் தான்…பரபரப்பை கிளப்பும் நபர்

October 21, 2022 at 11:04 am
pc

எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன் நான் தான் என்று ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர்கள் 

தமிழக முன்னாள் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து முதலமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்கள் தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாபதவியேற்றார். தொடர்ந்து 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பின்னர் இவரின் மகன் மற்றும் மகள் நான் தான் என்று பலரும் கூறி கொண்டு வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ 

அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் இக்பால் என்பவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர்,

புரட்சி தலைவி அம்மாவுக்கும், தலைவருக்கும் பிறந்தவன் தான் நான், 1960ல் அம்மாவுக்கு பிறந்ததாகவும், அப்பொழுது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். 

என் பெயரில் சொத்து எழுதிவிட்டனர். ரகசியம் தெரிந்தால் உயிருக்கு ஆபத்து வரும் என்று வேறொருவர் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துவிட்டார்கள்.

என்னை வளர்த்த அம்மா உண்மையை சொல்லவில்லை. மூடி மறைச்சிட்டாங்க…அப்பறம் நான் தோண்டி..தோண்டி கண்டுபிடித்தேன்.

ஜெயலலிதாவின் சொத்து என் பெயரில் இருப்பதாகவும், தற்போது இருக்க கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும் என்றார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website