எலுமிச்சையில் எவ்ளோ நற்குணங்கள் இருக்கிறது தெரியுமா?இத்தனை நாள் தெரியாம போச்சே!

June 10, 2022 at 12:43 pm
pc

நம்முடைய வீட்டு கிட்சனில் கிடைக்கும் எலுமிச்சையில் எவ்ளோ நற்குணங்கள் இருக்கிறது தெரியுமா? அதை முகம் மற்றும் சருமம் பராமரிப்பிற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

நாம் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சருமங்களை பராமரிக்க நிறைய கிரீம், சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சுரைசர் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றை விட நம்முடைய பாட்டி வைத்தியம் என்று சொல்லக்கூடிய பாரம்பரிய வழிமுறைகள் நிறைய உள்ளன. அது நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பொருட்களை வைத்து எளிமையாக தயாரிக்கலாம். அவற்றில் ஒரு சில வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.

1. பொடுகு பிரச்னையை குறைக்க

ஸ்ட்ரெஸ், கிளைமேட் சேன்ஞ் போன்ற காரணங்களால் நமக்கு பொடுகு, முடி உத்திரள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அப்படியே விட்டுவிட்டால் உங்களுக்கு சொட்டை, வழுக்கை போன்ற குறைபாடுகள் ஏற்படும். இதனை தவிர்க்க எலும்பிச்சை சாற்றை, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதனை தலை முடி மற்றும் வேறு பகுதிகளில் அதை நன்றாக அப்ளை செய்யவும். ஒரு 30 நிமிடங்கள் நல்லா ஊறவைத்து அலசிவிடுங்கள், இதை வாரம் ஒரு முறை செய்யவும். எலும்பிச்சையில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் பெனிபிட் பொடுகு பிரச்னையை குறைத்து முடி நன்றாக வளர உதவும்.

2. நகம் வெள்ளையாக

நகம் சாதாரணமாக வெள்ளையாக தான் இருக்கும். இப்பொழுது பெண்கள் அதிகம் மருதாணிக்கு பதிலாக நெயில்பாலிஷ் பயன்படுத்துவதால் நகம் மஞ்சலாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்ய எலும்பிச்சை பலத்தை சின்ன பீஸாக கட் செய்து நகத்தின் மேல் வைக்கவும். 10 நிமிடங்கள் களைத்து அதனை எடுத்துவிட்டு, ஆலிவ் ஆயிலைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் நகத்தில் இருக்கும் மஞ்சள் நிறம் அகன்று பளபளப்பாக தெரியும்.

3. கருமையை அகற்றும்

எலும்பிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் அது ஒரு நல்ல பிளீச்சிங் ஏஜென்டாக திகழ்கிறது. எனவே, நமக்கு கை முட்டி, அக்குள், கால் முட்டி என்று பகுதிகள் கருமையான தோற்றத்தை அளிக்கும். தினமும் எலும்பிச்சை சாற்றை அந்த இடங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்கு நன்கு ஊறிய பிறகு தண்ணீரால் கழுவிவிடவும். இதனை தொடர்ந்து செய்து வாருங்கள், அந்த இடங்களில் இருக்கும் கருமை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

4. முகத்தில் உள்ள ஹோல்ஸ் மூடப்படும்

நம்முடைய முகத்தில் சிலருக்கு அதிகமாக ஹோல்ஸ் இருப்பதால் அதில் டஸ்ட் புகுந்து அடைத்துக்கொள்வதால், பிம்பிள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு எலும்பிச்சை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

லும்பிச்சை சாற்றை சுத்தமான தண்ணீரில் சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். முதலில் முகத்தை கிலென்சிங் செய்து விட்டு, பிறகு இந்த தண்ணீரை டோனர் போன்று முகம் முழுவதும் தடவி விடுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுகுகளை சுத்தம் செய்து, முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தக்காளியில் இருக்கும் விதைகளை அகற்றி, நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எலும்பிச்சை சாற்றையும் சேர்த்து நன்று மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் நன்கு முகத்தில் உணர விட்டு, பின்பு அதை சுத்தமான நீரில் கழுவவும். தக்காளியில் இருக்கும் டார்ட்டாரிக் ஆசிட், எலும்பிச்சையில் இருக்கும் வைட்டமின் சி முகத்தில் இருக்கும் ஹோல்ஸ்களை அடைத்து ஜொலிக்கும் சருமத்தை உங்களுக்கு அளிக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website