எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் உடலில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா …?

March 10, 2023 at 6:59 am
pc

இந்திய சமையலில் ஒரு பொதுவான மூலப்பொருள் கருப்பு உப்பு. வெள்ளை உப்பிற்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான மூலப்பொருள் வேண்டுமென்றால் அதற்கு கருப்பு உப்பை பயன்படுத்தலாம்.

இதற்கு காரணம், கருப்பு உப்பில் இயற்கையான கனிமங்கள் மிக அதிகம் உள்ளன . இவை மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.

ஆயுர்வேதத்தின்படி கருப்பு உப்பு வாதம் மற்றும் பித்தம் ஆகிய இரண்டையும் சமநிலை செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய நாட்களில் தினமும் யோகா, உடற்பயிற்சி , ஜாக்கிங் போன்றவற்றை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பலருக்கும் கூட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளன.

அவர்கள் தங்கள் உடற்பயிற்சிக்கு பின், ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதால் சிறந்த பலன் பெற முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

கருப்பு உப்பு சேர்த்த எலுமிச்சை நீர் பருகுவதால் உண்டாகும் சில ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை நீர் மற்றும் கருப்பு உப்பின் கலவை எவ்வாறு உடல் எடை குறைய உதவுகிறது

இந்த புளிப்பு சுவை கொண்ட கருப்பு உப்பு சேர்க்கப்பட்ட எழும்சிச்சை நீர் செரிமான கோளாறுகளை நிர்வகிக்க உதவுகிறது. உங்கள் குடல் இயக்கம் மென்மையாகவும் சீராகவும் மாறுகிறது.
நீங்கள் எந்த ஒரு அஜீரண கோளாறுகளாலும் பாதிக்கப்படுவதில்லை.


இந்த மூலப்பொருட்கள் இரண்டுமே எடை இழப்பிற்கு உதவுகின்றன. உங்கள் உட்புற செரிமான மண்டலம் சரியாக இயங்கவில்லை என்றால் உங்கள் உடலின் அதிக எடையை குறைப்பது கடினமாகிறது. இது தவிர, இந்த நீர் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை இழப்பு செயல்பாடு எளிதாகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website