எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் நடிகர் பகத் பாசில்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

August 9, 2022 at 12:53 pm
pc

நடிகை நஸ்ரியாவின் கணவர்பகத் பாசில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

நடிகர் பகத் பாசில் 

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவரது மகன் நடிகர் பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

பின்பு 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில், பின்னர் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

2014-ம் ஆண்டு ரிலீசான பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தபோது நஸ்ரியா மீது காதல் வயப்பட்ட பகத், அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

.

திருமணத்துக்கு பின்னர் பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்டினார்.

இதன்பின்பு கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படம் மூலம் தெலுங்கில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் மாஸான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பகத்

நடிகர் பகத் பாசில் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அவரது மனைவி நஸ்ரியா, பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சியளிக்கிறார் பகத் பாசில். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சிலரோ அவர் சட்டை பெரிதாக போட்டிருப்பதால், அப்படி தெரிவதாக கூறி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website