எளிமையாக நடந்த இந்திய நிதியமைச்சர் மகள் திருமணம்!

June 9, 2023 at 11:36 am
pc

இந்தியாவின் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் மகள் வாங்மயிக்கு இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர். இத்தம்பதிக்கு வாங்மயி என்ற மகள் உள்ளார். வாங்மயி தேசிய செய்தித்தாளின் மூத்த நிருபராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வாங்மயிக்கும், மணமகன் ப்ரதீக் ஆகியோருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், திருமணத்திற்கு வருகை தந்த உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும், கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.

பல கோடி ரூபாய் செலவு செய்து தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலையில், மத்திய அமைச்சர் நிதியமைச்சர் தன் மகளுக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website