எளிமையான முறையில் சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா தயார் :.

May 27, 2022 at 1:09 pm
pc

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – ஒரு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கேரட் – 1
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
முந்திரி – 1டீஸ்பூன் , ஒன்றிரண்டாக உடைத்தது.
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பில்லை – சிறிதளவு.

செய்முறை :

  • கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு,முந்திரி, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.
  • சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.
  • கடைசியாக அரிசி உப்புமா மேல் 1/2 ஸ்பூன்
    தேங்காய் எண்ணை ஊற்றி
    கிளறி விடவும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website