எளிமையான முறையில் டேஸ்டியான ஆப்பிள் ரபடி செஞ்சி அசத்துங்க ….!!

June 10, 2022 at 7:01 am
pc

தேவையான பொருட்கள்:

பால் – 1/2 லிட்டர்

ஆப்பிள் – 2

பாதாம் – 10 (துருவியது)

சர்க்கரை – ஒரு கப்

முந்திரி பொடி – 2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர், ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

அந்த துருவளை வெறும் கடாயில் மிதமான தீயில் வைத்து சூடுபட கிளறவும்.

இப்போது அதில் பால், சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.

திக்கான பதம் வந்ததும், முந்திரி பொடி, பாதாம் துருவல் மற்றும் ஏலக்காய் துருவல் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

டேஸ்ட்டான ஆப்பிள் ரபடி ரெடி…

இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website