ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் உலர் பழங்கள்!

December 20, 2023 at 8:39 pm
pc

பொதுவாக உலர் பழம் என்பது இயற்கையான முறையில், வெயிலில் உலர்த்துவதன் மூலம் அசல் நீரின் உள்ளடக்கம் அகற்றப்பட்ட பழமாகும். இதன்படி, திராட்சை, டேட்ஸ், அத்திப்பழம், ஆப்ரிகாட், பீச்,மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை உலர் பழங்கள் என கூறலாம். இப்படியாக கிடைக்கும் உலர் பழங்களில் புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.

அந்த வகையில் உலர் பழங்களை அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு குறிப்பிட்ட சில நோய்கள் வரவே வராது என கூறப்படுகின்றது. அப்படி என்னென்ன நன்மைகள் உலர் பழங்களினால் கிடைக்கின்றன என தெரிந்து கொள்வோம்.

1.பேரீச்சம்பழம்:

இரும்புச்சத்து அதிகமுள்ள பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால், உடல் வலிமை, இரத்த சோகை பிரச்சினையிலிருந்து விடுதலை, அசைவ உணவு உட்கொள்ளாதவர்களுக்கு வைட்டமின்- சி கொடுத்தல் இப்படி ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கின்றது. அத்துடன் கால்சியம், அயர்ன் ஆகிய சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும்.

2. வால்நட்:

ஒமேகா ஃபேட்டி ஆசிட் (Omega Fatty Acid) உள்ள வால்நட்டானது இதயத்திற்கு நல்லது. வால்நட் ஆயிலை விட வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வருவதனால் இதயப் பிரச்சினையின் வீரியத்தைக் குறைக்கலாம். வால்நட்டில் புரோட்டின் அதிகமாகவும்,கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளது. இதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

3. பாதாம்:

பாதாமை ஊறவைத்தோ அல்லது எண்ணெய்யில் வறுத்தோ சாப்பிடலாம். புரோட்டின் அதிகமாகக் கிடைக்கக்கூடிய பாதாமை சாப்பிட்டு வருவதனால் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக்கூடும்.

4. அத்திப்பழம்:

ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்- சி, வைட்டமின்- டி, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ள அத்திப்பழமானது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

5. உலர் திராட்சை:

மன அழுத்தத்தை தவிர்க்கக்கூடிய திறனுடையது உலர் திராட்சை. உலர் திராட்சையானது ஸ்ட்ரெஸ் பஸ்டர் அளவினையும், இரத்த அழுத்தத்தையும் அஜீரணக் கோளாறுகளையும் தடுக்க உலர் திராட்சை உதவுகிறது. காய்ச்சல் சமயத்தில் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றலளிக்கக்கூடும்.

6. அப்ரிகாட்(Apricot):

வைட்டமின்-ஏ சத்து, கண் மற்றும் சருமத்துக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது அப்ரிகாட் பழமானது.

7. பிஸ்தா:

பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைக்கும், உடல் மினுமினுப்பாகவும், கூந்தலை வலிமையுடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

8. முந்திரி:

அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தையும் அளிக்கக்கூடியது முந்திரி. உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், இளம் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website