ஐந்து நிமிடத்தில் காரசாரமான வேர்க்கடலை சட்னி தயார்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை : ஒரு கப்
பச்சை மிளகாய்: 2
காய்ந்த மிளகாய்: 2
சிறிய அல்லது பெரிய வெங்காயம்: 2 துண்டுகள்
புளி: சிறிதளவு
உப்பு: தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய்: 2 டீஸ்பூன்
பூண்டு: 3 பல்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்கடலையையும் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாயுடன் சேர்த்து வறுத்துவைத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன்மேலே கூறிய மற்றப் பொருட்களைத் தண்ணீர் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சட்னி தயார்.
இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.கெட்டியாக துவையல் போல் அரைத்துசாதத்திற்கும் பிசைந்து கொண்டு சாப்பிடலாம்.