ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியது ….கதறும் மக்கள்…!

July 9, 2023 at 12:37 pm
pc

மதுரையில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை நெல்பேட்டை வெங்காய சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.190-க்கு விற்கப்படுகிறது. மும்பை, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி கிலோ ரூ.100 முதல் 130 வரை விற்கப்படும் நிலையில், மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வு சாமானியர்களுக்கு பெரிய அடியாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website