ஒரு வாரம் இதை குடிச்சி பாருங்க ….. சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, முகப்பரு எல்லாம் காணாமல் போவதை பார்ப்பீங்க…!!

June 22, 2022 at 10:52 am
pc

உங்கள் உடல் பராமரிப்பு சரியாக இருந்தால், உங்கள் சருமத்தில் எந்த வித பிரச்சனையும் வராது. எனவே, வெளிப்புற பராமரிப்பை விட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்! பளபளப்பான சருமத்தை யாருக்குத் தான் பிடிக்காது. அதற்காக நாம் அதிக பணம் செலவிட்டு கண்ட கண்ட இரசாயனம் கலந்த அழகு பொருட்களை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை நம் சருமத்திற்கு நன்மை தான் தருகிறது என்று நமக்கு தெரியுமா! தெரியாது அல்லவா?

எனவே, பொலிவான சருமத்துடன் ஆரோக்கியத்தை பெறுவதும் அவசியம். இயற்கையான முறையில் சருமத்தை அழகுபடுத்த இயற்கை பொருள்கள் நம்மிடம் கொட்டிக்கிடக்கிறது. இதை பயன்படுத்தி, ஒரு சத்தான ஜுஸ் தினமும் பருகி வந்தாலே போதும் உங்கள் சருமம் மட்டுமல்லாமல், உடலும் ஆரோக்கியமா இருக்கும். இந்த ஜுஸ்சை வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டே தயார் செய்யமுடியும். இப்போது அந்த ஜுஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

கற்றாலை ஜுஸ்

கற்றாலையில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பை தருகிறது. இந்த சாறில் உள்ள கிபெரெலின்ஸ் மற்றும் ஆக்ஸின் என்னும் ஹார்மோன் சருமத்தில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த ஜுஸை தினமும் ஒரு டம்ளர் அதிகாலையில் வெரும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இவ்வாறு குடித்து பாருங்கள்உங்கள் சருமத்தில் மாற்றம் ஏற்படுவதை பார்க்க முடியும்.

தக்காளி ஜுஸ்

உங்கள் சருமம் இளமையாக தெரிய வேண்டுமா? அதற்கு சிறந்தது தக்காளி. இதில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை குறைத்து சருமத்தை பளபளப்ப்பாக வைத்திருக்க செய்கிறது. இதில் சிறிது தேன் அல்லது உப்பு சேர்த்து குடிக்கவும். இது சாறில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது. தினமும் ஒரு டம்ளர் அதிகாலையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

கேரட் ஜுஸ்

வைட்டமின் ஏ நிறைந்த கேரட் ஜுஸை தினமும் எடுத்துக்கொண்டால் கண்களுக்கு மிகவும் நல்லது அது மட்டுமல்லாமல், முகப்பரு, பருக்கள், நிறமிகளால், சூரியனால் உண்டாகும் சேதம் போன்றவற்றை தடுக்கிறது. இதில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்டள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. அதிகாலையில் நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் வரை குடிப்பது நல்லது.

பீட்ரூட் ஜுஸ்

சருமத்தில் தழும்புகள் மற்றும் அடையாளங்களை போக்க பீட்ரூட் மிகவும் நல்லது. இதில் இருக்கும் இரும்பு மற்றும் பொட்டாசியம் இரத்தத்தை சுத்தப்படுத்தி நாளடைவில் தழும்புகள் மற்றும் அடையாளங்களை படிப்படியாக குணமாக்குகிறது. இதனுடன் மற்ற காய்கறிகளைக் கூட சேர்த்து அரைத்து ஜுஸாக பருகலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website