ஒரு வாரம் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிச்சு பாருங்க…. உடம்பில் நடக்கும் பல அதிசய மாற்றங்கள் என்னென்ன …?

November 14, 2022 at 6:42 am
pc
  • மஞ்சளை அன்றாட சமையல் அனைத்திலும் தவறாமல் எடுத்து கொள்ளும் ஒரு மசாலா பொருளாகும்.
  • இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
  • அதோடு பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட வல்லது.
  • அதுமட்டுமின்றி மஞ்சளை நீரில் சேர்த்து கலந்து குடித்தால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம் என கூறப்படுகின்றது.
  • அந்தவகையில் மஞ்சள் நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்றும் தற்போது இங்கு பார்ப்போம்.
  • மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பானம் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும்.
  • நாள்பட்ட வீக்கம்/அழற்சியானது பல நோய்களால் ஏற்படலாம். இருப்பினும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.
  • மஞ்சள் நீரைக் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக் படிகங்களைத் தடுக்கும் மற்றும் இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • மஞ்சள் மூட்டு வலி மற்றும் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருளாகும். எனவே தான் மஞ்சள் நீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை நீங்கும்.
  • மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. மேலும் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பித்தநீரின் வெளியீட்டையுத் தூண்டும். எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்.
  • வயதானதற்கான முக்கியமான காரணிகளில் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. ஆனால் மஞ்சளில் உள்ள குர்குமின், இவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website