ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோடா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த சோகமான முடிவை எடுத்துள்ளனர். அதன்படி, நூர் உல் ஹபிப், சஜத் அகமது, ஷகினா பேகம், நசீமா அக்தர், ருபினா பனோ, ஜாபர் சலீம் ஆகியோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.
ஆறு பேரும் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சடலங்களை மீட்டுள்ள பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.