ஒரே நாளில் 38 லட்ச ரூபாய் வருமானம்! தக்காளி விற்று லட்சாதிபதியான விவசாயி

July 14, 2023 at 2:31 pm
pc

தக்காளியின் விலையேற்றத்தால் ஒரே நாளில் ஒரு விவசாயி லட்சாதிபதியாகியுள்ளார்.

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை

கடந்த சில வாரங்களாக அன்றாடம் உணவில் சேர்க்கப்படும் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தக்காளி இன்றியமையாத பொருளாக உள்ளதால் அதை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி விலை ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.200க்கு விற்பனையாகியது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி அஜய் என்பவர் தனக்கு சொந்தமான காய்கறி கடைகளில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல், கர்நாடகாவை சேர்ந்த ஒரு விவசாய குடும்பம் ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளனர்.

ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

கர்நாடகாவின் கோலார் அடுத்துள்ள பெத்தமங்கலா என்ற ஊரில் குப்தா என்பவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் விளைந்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2000க்கும் அதிகமான பெட்டி தக்காளியை விற்பனை செய்தனர். இந்த விற்பனையால் ஒரே நாளில் ரூ.38 லட்சத்தை வருமான ஈட்டியுள்ளனர்.

இது குறித்து குப்தா கூறுகையில், 2 வருடங்களுக்கு முன் 15 கிலோ தக்காளி பெட்டிக்கு ரூ.800 தான் கிடைத்தது. தற்போது அதே 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.1900க்கு விற்பனையாகிறது. மொத்தம் 2000 பெட்டிகள் விற்றதால் நாங்கள் ரூ.38 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளோம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website