ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்…!!

January 23, 2023 at 7:09 am
pc
  • தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது.
  • மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சியில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, விட்டமின் சி, போன்றவைகள் இருக்கின்றது.சோடியம், இரும்புச்சத்து, கால்சியம் ,பொட்டாசியம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்றவைகள் இஞ்சியில் இருக்கின்றது.
  • முதலில் இஞ்சியை தோலை நன்கு சீவி இஞ்சியை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
  • மேலும் தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அந்த விழுதினை தலையில் பத்து போட வேண்டும். தலைவலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து கொண்டால் கண் பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website