ஒற்றை தலைவலிக்கு இதோ ஒரு தீர்வு!!

March 16, 2023 at 11:31 pm
pc

ஒற்றைத் தலைவலி என்பது பொதுவாக மிதமான அல்லது கடுமையான தலைவலி, தலையின் 1 பக்கத்தில் துடிக்கும் வலியாக உணரப்படுகிறது.

பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மற்றும் ஒளி அல்லது ஒலிக்கு அதிக உணர்திறன் போன்ற அறிகுறிகளும் உள்ளன. ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான சுகாதார நிலை, ஒவ்வொரு 5 பெண்களில் 1 பேரையும், ஒவ்வொரு 15 ஆண்களில் 1 பேரையும் பாதிக்கிறது.

  • ஒற்றை தலைவலி நபரைப்பொறுத்து வேறுபடும். 

  • ஒற்றை தலைவலி ஏற்பட பொதுவான காரணம் என்னவெனில் மன அழுத்தம்.

  • சில பேருக்கு அதிகபடியான வெளிச்சத்தினால் ஏற்படுகிறது.

  • ஸ்ட்ரோங்கான வாசனைத்திரவியங்களின் மணம் போன்றவற்றாலும் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது.

  • உங்களுக்கு ஏற்படும் தலை வலி மைக்ரேன் தானா என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். 

  • மைக்ரேன் வலி தோன்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு ஒளி, அல்லது லேசான மூடுபனி. மங்களான பார்வை. உங்கள் தலையின் ஒரு பக்கத்தில் வலி போன்றவை ஏற்படலாம்.

குணப்படுத்தும் வழிகள்

  • சிறிய மசாஜ் ஒன்று தலைக்கு வழங்குதல். 

  • கனமான வாசனை அல்லாது மெல்லிய வாசனையை கொண்டுள்ள எஸ்ஸென்ட்யல் ஆயிலை பயன்படுத்தி மசாஜ் கொடுக்க வேண்டும்.

  • சில பேருக்கு கோப்பி அருந்தும்போது வலி குறையும். 

  • சில பேருக்கு அதிகபடியான நீரிழப்பினால் கூட வலி ஏற்படும்.

  • ஆகையால் நீரிழப்பினை சரி செய்யும் வகையில் தண்ணீர் தெிகமாக அருந்துதல் வேண்டும். 

  • கற்றாளை பானம் அல்லது எலுமிச்சை பானம் மற்றும் இஞ்சி டீ போன்றவற்றை கூ்ட அருந்தலாம். 

  • பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .
  • இவற்றிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் மூளை செயற்பாட்டினை நரம்புகளை சரியாக்க உதவும்.


    அப்படி கூட சரியாகவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம்.

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website