கஜினி-2 முருகதாஸ் அதிரடி!!குஷியில் ரசிகர்கள்

October 7, 2022 at 12:49 pm
pc

இயக்குனர் முருகதாஸ் ஒரு காலத்தில் விஜய்யை வைத்து படம் எடுத்து தொடர் ஹிட் கொடுத்தவர். கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என அவர்களது படங்கள் பெரிய ஹிட் ஆனது. ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் சொதப்பி தோல்வி அடைந்ததால் அடுத்து அவர் இயக்க இருந்த விஜய் படம் ட்ராப் ஆனது.

தற்போது மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க தீவிரமாக தயாராகி வருகிறாராம் முருகதாஸ். அவர் பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் தான் இயக்கி ஹிட் அடித்த கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யாவும் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூடிய விரைவில் செய்தி வரலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website