கடக்நாத் கோழி பற்றி தெரியுமா? பல நோய்களுக்கு மருந்தாகும் அற்புத இறைச்சி

July 9, 2023 at 10:37 am
pc

கடக்நாத் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்தால் விடவே மாட்டீங்க… அந்த அளவிற்கு அந்த கோழி இறைச்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வாங்க அந்த கடக்நாத் கோழி பற்றி தெரிந்துக்கொள்ளலாம்…

கருங்கோழி

மத்திய பிரதேசத்தில் காணப்படும் இந்த கருங்காலி கோழியை கலிமாயி, கடக்நாத் கோழி என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த கோழியின் நிறம் கருப்பு, பென்சில் கருப்பு மற்றும் மயில் கருப்பில் காணப்படும். பார்ப்பதற்கு இந்த கோழி ரொம்ப அழகாகவே இருக்கும்.

நாட்டுக்கோழிகளில் கடக்நாத் கோழியின் வளர்ப்பு தான் அதிக லாபத்தை ஈட்டித்தருகிறது. இதனால்தான் பெரும்பாலோர் கடக்நாத் கோழியை வளர்க்கிறார்கள்.

ஏனென்றால், இந்த கடக்நாத் கோழியில் மருத்துவ குணம் அதிகளவில் உள்ளது. மேலும், புரதம், அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

அதிக லாபம் தரும் கடக்நாத் இறைச்சி 

கடக்நாத் கோழி ஆண்டிற்கு 60 முதல் 90 முட்டைகள் இடும். இக்கோழியின் முட்டை, இறைச்சி எல்லாமே கருப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த வகை சேவல் கோழி 2 கிலோ எடை கொண்டிருக்கும். பெட்டை கோழி 1.5 கிலோ எடை கொண்டிருக்கும். மற்ற நாட்டுக்கோழிகளில் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த கோழியின் எடை மிகக் குறைவுதான்.

கடக்நாத் கோழி குருணை, கம்பு போன்ற தீவனங்களைத்தான் உட்கொள்ளும். இக்கோழியின் விலை விலை கேட்டால் அசந்துடுவீங்கள். இந்த கோழியின் விலை ஆட்டு இறைச்சியின் விலைக்கு இணையாக இருக்குமாம்.

கடக்நாத் கோழி இறைச்சி 1 கிலோ விலை ரூ.700 முதல் ரூ.800 வரை இருக்குமாம். இக்கோழியை வளர்ப்பவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டிவிடலாம்.

தற்போது இக்கோழியைப் பற்றியும், இக்கோழியின் இறைச்சியில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றியும் தென்மாநிலங்களில் பரவலாக பரவத் தொடங்கியுள்ளது.

மருத்துவ குணங்கள் 

கடக்நாத் கோழியின் இறைச்சியில் 0.73 கொழுப்பு உள்ளது. இந்த இறைச்சியை அனைவரும் தாராளமாக உட்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

இக்கோழி இறைச்சியில் காணப்படும் அமினோ அமிலங்கள் தசைநார்களின் வளர்ச்சிக்கும் ரத்த குழாய்களின் நீட்சிக்கும் உதவி செய்கிறது. இதன் இறைச்சியில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், இதயம் சார்ந்த நோய்களை தடுக்கின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துக்கள் கொண்டிருக்கின்றன. மனித எலும்புகளுக்கு இந்தக் கோழியின் இறைச்சி வலிமை சேர்க்கின்றன. 

கடக்நாத் கோழியின் இறைச்சியை சாப்பிட்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமடையும். உடல் பலவீனம் வீங்கும். பெண்களுக்கு கருப்பை அழற்சி, ரத்தப்போக்கு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று மருத்துவ ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website