கடல் பாசியை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் அதிசய நன்மைகள் என்ன தெரியுமா?

November 16, 2022 at 8:03 am
pc
  • கடற்பாசி எந்த வகையான உப்பு நீரிலும் மற்றும் நன்னீரிலும் வளரக் கூடியது. இது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவரமாகும்.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் , ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் பி 6 தவிர வைட்டமின்கள் கே, ஏ, சி மற்றும் ஈ ஆகியவையும் காணப்படுகிறது.
  • குறிப்பாக இது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகின்றது. இதனை உணவில் சேர்ப்பது இன்னும் நன்மையே தரும்.
  • அந்தவகையில் கடற்பாசியால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
  • கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும்.
  • கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.
  • கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும்.
  • கடல் பாசியை உங்களுடைய வழக்கமாக உணவோடு சேர்த்து தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டு வரும்போது நார்ச்சத்துக்கள் நிறைந்த டயட்டாக மாறிவிடும். இது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் எடை கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும்.
  • கடல் பாசி வயிற்றில் உள்ள என்சைம்களை முறையாகத் தூண்டி, வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தும், கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வயிறை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
  • நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.
  • கடல் பாசி உடலில் உண்டாகும் ஆக்சிடேட்டிவ் சேதத்தால் உண்டாகும் பிரச்சினைகளைச் சரிசெய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website