கடவுளே இரக்கம் இல்லையா? சீனாவில் மனிதர்களை தாக்கும் 8 புதிய வைரஸ்கள்!

October 27, 2023 at 5:35 pm
pc

சீனாவின் ஹைனான் தீவில் இருந்து சீன விஞ்ஞானிகள் புதிதாக 8 வைரஸ்களை கண்டுபிடித்துள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் 2 ஆண்டுகளாக முடக்கி போட்ட கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாக பல்வேறு உலக நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அத்துடன் உயிரியல் போரை தொடங்குவதற்காக சீனா தொடங்கிய ஆராய்ச்சியில் இருந்தே இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் உலுக்கியதாக சில நாட்டு தலைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்து வரும் இந்த நிலையில், தற்போது சீனாவில் இருந்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சீனாவில் ஹைனான் தீவில் இருந்து புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ்கள் மனிதர்களை பாதிக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website