கடுமையா ஒர்கவுட் செய்யும் கீர்த்தி சுரேஷ் ..அடுத்த படத்திற்கான வேலையோ ?

October 16, 2023 at 6:45 pm
pc

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்திற்கு மேல் லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தமிழில் ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் ரஜினி, விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’சைரன்’, ’ரகு தாத்தா’, ’ரிவால்வர் ரீட்டா’, ’கன்னிவெடி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ’தெறி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடித்த வருகிறார். அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வேற லெவலில் புஷ்ஷப் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website