கண் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அற்புத பானம் …!!

July 2, 2022 at 12:08 pm
pc
  • கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
  • இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.
  • கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.
  • கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
  • கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website