கமல் ஜோடியாக வித்யா பாலன்…

April 30, 2023 at 1:47 pm
pc

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைக்கு வந்துள்ள நிலையில் கமல்ஹாசன் படத்தை எடுப்பதற்கான முன் கட்ட பணிகளை மணிரத்னம் தொடங்கி இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த நாயகன் படம் பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை பரிசீலித்தனர். ஆனால் தற்போது பிரபல இந்தி நடிகை வித்யா பாலனிடம் பேசி வருவதாக தகவல்கள் பரவி உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க வித்யா பாலன் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதுவதாக கூறப்படுகிறது.

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் வித்யா பாலன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. த டர்ட்டி பிக்சர் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website