கர்பப்பை வலுவடைய வேண்டுமா…? அப்போ உத்தான பாதாசனம் செய்யுங்கள் ….!!

பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்.ஆனால் சற்றே கடின ஆசனம் எனலாம்…விடா முயற்சியுடன் முயன்றால்.எளிதில் வந்து விடும்.
செயல்முறை:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும்.
கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்று விரிப்பில் வைக்கவும்.
மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கால் மூட்டுகளை மடக்காமல் கால்களை தரையிலிருந்து 1 அடி தூக்கி (30 டிகிரி )நிறுத்திஆழ்ந்த சுவாசம் 10 எடுக்கவும்.
அதேநிலையிலிருந்துகால்களை மீண்டும் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே 60 டிகிரி கோணத்தில் நிறுத்திஆழ்ந்த சுவாசம் 10 எடுக்கவும் .
மீண்டும் அதே நிலையிலிருந்து கால்களை மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே 90 டிகிரிக்கு நிறுத்த ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்த மெதுவாக கால்களை மூச்சை வெளியேற்றிக்கொண்டே …விரிப்பில் வைத்த சிறிது ஒய்வெடுக்கவும்.
தற்போது கால்களை மூச்சை உள்ளிழுத்த வாறு …மீண்டும் 90டிகிரிக்கு வைத்த ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்து
கால்களை மூச்சை வெளியேற்றிக்கொண்டே 60 டிகிரிக்கு வைத்து…ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்துமீண்டும் மூச்சை வெளியேற்றிக்கொண்டே கால்களை 30 டிகிரி கோணத்தில் வைத்து ஆழ்ந்த சுவாசம் 10 எடுத்துஇறுதியில் மூச்சை வெளியேற்றியவாறு கால்களை விரிப்பில் வைத்து ஒய்வெடுக்கவும்.இது ஒரு சுற்று
இம்முறையில் 3 சுற்றுகள் செய்யலாம்.
ஆரம்ப காலத்தில் 5 சுவாசங்கள் போதும்.
மாற்று ஆசனமாக கண்டிப்பாக 5 சுற்றுகள் புஜங்காசனம் செய்ய வேண்டும்…