கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்க தகுந்த ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பானங்கள் …!!

August 1, 2022 at 11:37 am
pc
  • பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் .அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் பருக வேண்டிய ஆரோக்கிய பானங்கள் பற்றி பார்க்கலாம் .
  • தினமும் 2-3கிளாஸ் பால் குடிக்க வேண்டும் .பாலில் காணப்படும் கால்சியம் ,புரதம்,விட்டமின் பி 12 போன்றவற்றை தாய் ,சேய் இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களாகும் .
  • கர்ப்பிணிகள் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடித்து வர மலச்சிக்கல் ,அஜீரணம் போன்ற பிரசைகள் எளிதில் குணமாகும் .அதுமட்டும் அல்லாமல் உடலை நீரேற்றமாகவும் வைத்து கொள்ளும் .
  • ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் சோர்வு குமட்டல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது .
  • கர்ப்பகாலத்தில் ஏற்படும் செரிமாண சிக்கல்கள் மற்றும் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த தீர்வு.வாரத்தில் மூன்று முறை குடித்து வரலாம் .
  • வாரத்தில் இரு முறை சர்க்கரை சேர்க்கப்படாத பீட்ரூட் ஜூஸை குடித்து வந்தால் உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் .அதோடு இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளையும் தடுக்கிறது .
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை சுகவீனத்தை குறைக்க கேரட் ஜூஸ் மிகவும் உதவுகிறது .அது மட்டும் அல்லாமல் கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடண்ஸ் அவர்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது .வாரத்தில் மூன்று முறை கேரட் ஜூஸை பருகலாம் .
  • கொத்தமல்லி விதைகள் மற்றும் இஞ்சியை இடித்து சிறிதளவு பனை வெல்லத்துடன் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலில் இருந்து உடனடியாக நிவாரணம் தரும் .
  • இது எல்லாவற்றிற்கும் மேலாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது இயற்கை நமக்கு அளித்த சுத்தமான மருந்து . எனவே கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது 8கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும்
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website