கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்…!!

July 2, 2022 at 11:33 am
pc

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இனிமையான அனுபவம். இக்காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அது உடலளவிலும், மனதளவிலும் தான். வயிற்றில் குழந்தை வளர வளர கருப்பையின் அளவும் குழந்தைக்கு ஏற்ப வளரும். அதோடு, பெண்களின் இடுப்பளவு, அடிவயிறு, தொடை போன்றவையும் விரிவடையும். பெண்களின் வயிற்றுப் பகுதியில் மாற்றம் ஏற்படுவதால், பெண்கள் வயிற்றில் சற்று பிடிப்புக்களை உணர்வார்கள். இங்கு கர்ப்ப கால வயிற்றுப் பிடிப்புக்களைக் குறைக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


அவகேடோ:

அவகேடோ பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது கருப்பையில் உள்ள காயங்கறைக் குறைக்க உதவும் மற்றும் கருப்பையில் மெல்லிய படலத்தை உருவாக்கி, பிடிப்புக்களைக் குறைக்கும்.

டார்க்சாக்லேட்:

டார்க் சாக்லேட் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இதுவும் கர்ப்ப கால பிடிப்புக்களை சரிசெய்யும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கருப்பையில் உள்ள காயங்களைக் குறைத்துப் பிடிப்புகளைக் குறைக்கும் மற்றும் வாழைப்பழம் மலச்சிக்கல் பிரச்சனைத் தடுக்கும்.

க்ரீன்டீ:

கர்ப்பிணிகள் க்ரீன் டீயைக் குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வயிற்றுப் பிடிப்புகளைக் குறைக்கும்.

பசலைக்கீரை:

பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இது கருப்பைச் சுவர்களை வலிமைப்படுத்தி, கர்ப்ப கால பிடிப்புக்களைக் குறைக்கும்.

பால்:

பால் கர்ப்ப கால வயிற்றுப் பிடிப்புக்களைக் குறைக்க மட்டுமின்றி, அதில் உள்ள கால்சியம் குழந்தையின் எலும்புகளை வலிமைப்படுத்தவும் செய்யும்..

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website