கலக்கும் சூரி!!நடிகர் நிவின் பாலியுடன் சூப்பர் அப்டேட்’ஏழு கடல் ஏழு மலை’…



பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தின் சூப்பர் அப்டேட்டை நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கற்றது தமிழ்’ ’தங்க மீன்கள்’ ’தரமணி’ ’பேரன்பு’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது அவர் ,’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார் பெரும் குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலி, சூரி உள்பட பலர் நடித்தி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சலி, சூரி, நிவின் பாலி ஆகியோர் டப்பிங் செய்த காட்சிகளின் வீடியோக்களையும் அவர் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.