கலைஞர் நிகழ்ச்சி: அஜித், விஜய் வருவார்களா?
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக திரையுலகம் சார்பில் பிரமாண்ட விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 35 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கலைஞர் எழுதிய வசனங்களை மேடையில் நடித்து காட்டும் வகையிலும் நிகழ்ச்சிகள் தயாராகி வருகிறதாம்.
இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் கமல் வருவது உறுதியாகி இருக்கும் நிலையில், அஜித் மற்றும் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்களா என கேள்வி எழுந்திருக்கிறது. இன்று தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி மீடியாவை சந்தித்த போது இது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது.
விஜய், அஜித் ஆகியோரை அழைத்திருக்கிறோம், அவர்கள் வர வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை என பதில் கூறி இருக்கின்றனர்.