கழன்று கீழே விழுந்த மாப்பிள்ளையின் டிரவுசர் – சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த மணப்பெண்!

May 27, 2022 at 12:03 pm
pc

திருமணத்தின் போது, மணமகளின் கழுத்தில் மாலை போட்ட சில நொடிகளிலேயே, மணமகனின் கால்சட்டை கீழே நழுவி விழுந்த சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகனும், மணமகளும் திருமண மேடையில் கைகளில் மாலைகளுடன் நின்று கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி கொண்டனர். 

இந்த நிலையில், மணப்பெண்ணின் மீது மாலையை போட்டவுடன், அவரது கால்சட்டை மணமகள் முன்னால் திடீரென கீழே நழுவியது. இதனை கவனித்த புதுப்பெண் குபீரென்று சிரிக்க ஆரம்பித்தார். அங்கு கூடியிருந்த அனைத்து விருந்தினர்களும் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த வீடியோவில், அங்கு என்ன நடந்தது? ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்பதை உணர, மணமகன் சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். 

பின் தன்னை தானே பார்த்து வெட்கத்தில் அவரும் சிரித்தார். இதற்கிடையில், இந்த சம்பவத்தை பார்த்த மணமகள், சிரிப்பதை நிறுத்த முடியாமல் தவித்தார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website