கழிவறையை விட Bed Sheetல் சுமார் 1 கோடிக்கு மேல் பாக்டீரியா இருக்குதாம்!

July 9, 2023 at 7:52 am
pc

வெளியான ஷாக் ரிப்போர்ட் நாம் பயன்படுத்தும் கழிவறையில் இருப்பதை விட ஒரு மாதம் பயன்படுத்தும் போர்வைக்குள் 1 கோடிக்கும் மேல் பாக்டீரியா உள்ளதாக மருத்துவ ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தினமும் பயன்படுத்தப்படும் போர்வையையும், தலையணை கவரையும் எத்தனை முறை நாம் சுத்தம்படுத்துகிறோம் என்று கேள்வி கேட்டால் அதற்கு நம்மிடம் பதில் கிடையாது.

ஒரு சிலர் 2 மாதங்களுக்கு மேல் போர்வையையும், தலையணையையும் சுத்தம் செய்யாமலேயே பயன்படுத்தி வருவார்கள். தினமும் உடுத்தும் துணிகளை மட்டும் துவைக்கிறோம். ஆனால், போர்வையை சுத்தம் செய்கிறோமா?

இப்படி போர்வையை சுத்தம் செய்யாமல் இருந்தால் ஒரு மாதத்தில் போர்வைக்குள் 1 கோடிக்கு மேல் பாக்டீரியா தஞ்சம் அடைந்துவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1. நம்முடைய படுக்கை விரிப்புகளில் 10 கோடிக்கும் அதிமாக பாக்டீரியா இருப்பதாக மருத்துவ தகவல் தெரிவித்துள்ளது. அதுவே 1 மாதம் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமாக பாக்டீரியா இருக்கிறதாம்.

2. டூத் பிரஷ் ஸ்டாண்டில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமாம்.

3. தலையணை உறையில் 4 வாரத்தில் மட்டும் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்குமாம். ஒரு வாரத்திலேயே சுமார் 5 மில்லியன் பாக்டீரியாக்கள் உண்டாகிவிடுமாம். 

4. தலையணை, படுக்கை விரிப்புகளை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய உமிழ்நீர், வியர்வைதான் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. அதனால், ஒவ்வொரு வாரமும் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளை சுத்தம் செய்து மாற்றுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website