கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு!

November 28, 2022 at 6:07 pm
pc

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ ஒரு படத்திற்கு புக் செய்த பின் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் அட்வான்ஸ் பணமாக மட்டுமே 50 சதவிகிதத்திற்கு மேல் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு படம் முடிந்த உடன் மீதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.

இதன் காரணமாக தயாரிப்பாளர்களும் அட்வான்ஸ் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, வட்டிக்கு வெளியில் பணம் வாங்கி அவர்களுக்கு அட்வான்ஸ் பணத்தை கொடுத்து குறைந்தது 6 மாதமாவது அப்படத்தில் புக் செய்வார்கள், அப்படி செய்யும்போது தயாரிப்பாளர்களுக்கு அந்த ஆறு மாதத்தில் வட்டிக்கு மேல் வட்டி எகிறிவிடும்.

படம் ஹிட்டானால் பரவாயில்லை ஆனால் படம் வெளியானவுடன் தோல்வியடைந்தால் அந்த வட்டி குட்டி போட்டு அவர்களை மோசமான நிலைக்கு தள்ளிவிடும். அப்படிப்பட்ட சூழலால் நஷ்டமடைந்து பல தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை விட்டே சென்றார்கள் எனலாம். இதில் தயாரிப்பாளர்களின் நிலையை நன்றாக அறிந்து கொண்ட நடிகர்கள் இரண்டு பேர் நம் தமிழ் சினிமாவில் உள்ளார்கள்.

அதில் முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவர் சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகும் போது, படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால், அந்த தயாரிப்பாளர்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே அட்வான்ஸாக வாங்கி நடித்தார். மேலும் படம் ரிலீசாகி வெற்றி பெற்றதற்கு பின்பு தான் தனது முழு சம்பளத்தை வாங்கினார் ரஜினிகாந்த்.

இவரை போலவே இரண்டாவதாக நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். அண்மையில் இயக்குனர் பி.வாசு அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி ஒரு படத்தில் கமிட்டானால் ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கியவர். ஆனால் அவர் அட்வான்ஸ் பணமாக ஒரு ருபாய் மட்டும்தான் வாங்கி நடிப்பாராம்.

80 காலக்கட்டத்திலிருந்தே அவர் இந்த பழக்கத்தை கொண்டவராம், தயாரிப்பாளர்கள் படும் நஷ்டத்தை நன்கு அறிந்து படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் சம்பளத்தை முழுசாக பெற்றுக்கொள்வாராம். கவுண்டமணி அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை, அவர் கேட்டால் தயாரிப்பாளர்கள் கொட்டி கொடுப்பார்கள் ஆனால் அவர் பெருந்தன்மையாக நடந்துகொண்டார் என பி. வாசு நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website