காகம் சகுனம் சொன்னால் வீட்டிற்கு விருந்தினர் வருவார்களா…? அதன் அறிவியல் உண்மை என்ன …!!

December 28, 2022 at 8:56 am
pc

ஒருவரது வீட்டில் காகம் தொடர்ந்து கரைந்தால், அவர்கள் வீட்டிற்கு யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்று கூறுவர். அதையடுத்து காகத்தின் செயல்களை கொண்டு அவை நல்லதா கெட்டதா என கூறுவதுண்டு.

இந்நிலையில் ‘காக்கைபாடினியார்’ என்னும் சங்ககாலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களை பாடியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம். பயணத்தின் போது காகம் வளம் இருந்து இடம் போவது லாபத்தையும், இடமிருந்து வளம் போவது நஷ்டத்தையும் உண்டாக்கும்.

பயணம் செல்பவரை நோக்கி காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால் பயணத்தை தவிர்த்து விட வேண்டும். ஒருவருடைய பயணத்தின் போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் சீண்டினால் பயணத்தை தொடர்வது நல்லதல்ல.

பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், அந்தப் பயணத்தால் பலவிதமான தன லாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது காகத்தின் எச்சம் விட்டால் பயணத்தின் போது உணவுக்கு பஞ்சம் இருக்காது.

யாத்திரை புறப்படும் போது காகம் எந்த பொருளை தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்த பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும். காரணமின்றி கரைந்து ஒலி எழுப்பும் காகம், பஞ்சம் வரப் போவதையும், காரணம் இன்றி சுற்றுச்சுற்று பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாக பறக்கும் காகம் அந்த பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப் போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.

காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்து கரைந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும் என்பதை ஐதீகம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website