காங்கிரஸிற்கு நன்கொடை அளித்த காயத்ரி ரகுராம்!

December 18, 2023 at 10:40 am
pc

பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் காங்கிரஸிற்கு நன்கொடை அளியுங்கள் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். பாஜகவில் இருந்து தன்னை விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 138 -ம் ஆண்டை முன்னிட்டு அக்கட்சிக்கு ரூ.1380 நன்கொடை அளித்துள்ளார். அதற்கான ரசீதையும் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம்.

வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்” என்று கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website