காரசாரமான சிக்கன் விங்ஸ் இப்படி செய்து பாருங்க …வீடே மணமனக்கும் …!!

October 8, 2022 at 3:55 pm
pc
தேவையான பொருட்கள்

சிக்கன் விங்ஸ் with ஸ்கின் -400 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி-1
எலுமிச்சை- கால் அளவு
உப்பு -தேவையான அளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் -1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
முழு கரமசாலா தூள்

செய்முறை

எல்லாத்தையும் ஒண்ணாபோட்டு பதமா பிசறி 15 நிமிஷம் ஊறவிடுங்க.
ஊறனதும் இடுப்ப பத்த வைச்சி குக்கரை ஏத்தி 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் , பட்டை ,சோம்பு சீரகம் ,பிரிஞ்சி இலை , கல்பாசி அன்னாசி பூ , லவங்கம் ,கறிவேப்பிலை இப்படி கிடைக்கிற வாசனை பொருளயெல்லாம் போட்டு தாளிச்சி, ஊற வைச்சிருந்த மசாலா சிக்கன போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊத்தி எண்ணி 3 விசில் விட்டு இடுப்ப அணைச்சிடுங்க.
விசில் அடங்கனும் திறந்து 5 நிமிஷம் கொதிக்க விட்டு இறக்குனா சுவையான சிக்கங்கறி ரெடி!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website