கார்த்தியின் ‘சர்தார்’ படம் 100 கோடி வசூல் சாதனை!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படம் வெளியானது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானது. இந்தப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார் கார்த்தி. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதனிடையில் மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படத்திலும் நடித்தார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவான இந்தப்படம் தீபாவளி ரிலீசாக வெளியானது. இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை குவித்தது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் நல்ல வசூலை செய்து வந்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சர்தார்’ படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.