காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

August 27, 2023 at 8:39 pm
pc

சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 

தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன. நீர் சுத்திகரிப்பு சார்ந்து பல முறைகள் உலகின் அத்தனை நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

நீரின் தரத்தை சரியான அளவில் தங்களின் நாட்டு மக்களுக்கு வழங்க அந்தந்த நாடுகள் தங்களால் முடிந்த அளவு முயற்ச்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் தரமான குடிநீர் 100 சதவீதம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். புள்ளிவிவரங்களின் படி ஓவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒருவர் தரமற்ற குடிநீரால் உயிரிழக்கிறார்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல நாடுகளில் கடல் நீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேமிப்பு போன்ற பல முறைகள் பின்பற்றபடுகின்றன. இந்நிலையில் காற்றில் இருந்து தரமான குடிநீரை பிரித்தெடுக்கும் முறையை பல நாடுகள் கடந்த சில வருடங்களாக கையிலெடுத்து வருகின்றனர். அதை atmospheric water generator (AWG) என்ற கருவியின் மூலம் சாத்தியப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருவியானது சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க உதவும். உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் AWG எனும் கருவியை உற்பத்தி செய்து தேவைப்படும் மக்களுக்கு அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பத தன்மையின் அளவை பொறுத்தே இக்கருவியை உபயோகிக்க முடியும் என்றும் இன்னும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு முழு அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website