கிரிஸ்பியான ஃபிஷ் ஃப்ரை எப்படியும் செய்யலாமே ….!!

August 8, 2022 at 10:48 am
pc

மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பெங்காலி ஃபிஷ் ஃப்ரை கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான பெங்காலி மீன் வருவல் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகள்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு இணுக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை மூடி
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

பெங்காலி மீன் வறுவல் செய்வதற்கு முதலில் உங்களுக்கு பிடித்தமான நல்ல முள் இல்லாத மீனாக வாங்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்ஸ்டன்டாக செய்யக்கூடிய  இந்த மசாலா ரொம்ப ஸ்பைசியாக, சூப்பராக இருக்கும். முதலில் ஒரு மிக்ஸி ஜார் ஒன்றை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, சுத்தம் செய்து நறுக்கிய மல்லி தழை சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கொரகொரப்பாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த விழுதுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை மேலே கொடுத்துள்ள அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர்  இதனுடன் கஸ்தூரி மேத்தி சேர்த்தால் ரொம்பவும் சுவையாக இருக்கும். கஸ்தூரி மேத்தி என்பது வெந்தயக் கீரையை உலர வைத்து பொடித்து வைத்திருப்பார்கள். இது சூப்பர் மார்க்கெட்டுகளில் மலிவாக கிடைக்கும்.

பின்னர் இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, அரை மூடி எலுமிச்சை சாற்றை விதைகள் நீக்கி பிழிந்து கொள்ளுங்கள். இப்போது நன்கு கைகளால் பிசிறி விடுங்கள்  இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்து கலந்தால் ரொம்ப சுலபமாக இருக்கும். இதில் தண்ணீர் கொஞ்சம் கூட சேர்த்து விடாதீர்கள். தேவையானால் எண்ணெய் ஊற்றி நன்கு மீன் மசாலா பதத்திற்கு கலந்து வைத்த பின்பு மீன் துண்டுகள் ஒவ்வொன்றாக எடுத்து எல்லா புறமும் நன்கு ஒட்டும் படி மேக்னட் செய்ய வேண்டும்.

எல்லா இடங்களிலும் மசாலா கலவை ஒட்டிய பின்பு ஒரு 15 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மசாலா உள்ளே இறங்கும். பிறகு ஒரு நான்ஸ்டிக் தவா அல்லது தோசை கல்லில் தேவையான அளவிற்கு கடலை எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள், ஒரு குண்டன் சாதம் கொடுத்தாலும் உங்களுக்கு போதவே போதாது சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website