கிரீன் டீ உண்மையிலேயே நல்லதுதானா…? ப்ளாக் டீ பயன்படுத்தலாமா…?

August 12, 2022 at 6:42 am
pc

ஆக்சிஜன் நல்லது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதே ஆக்சிஜன் இரும்பில் பட்டால் துருப்பிடிக்கிறதல்லவா? Oxidation எனப்படுகிற இதே விஷயம் மனித உடலிலும் நடக்கும். நமது உடலில் உள்ள செல்களிலும் oxidation நடக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும், வெயில், சுற்றுச்சூழல் மாசின் பாதிப்புகளாலும், புகை, குடிப்பழக்கம், துரித உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் உடலின் செல்களில் oxidation அதிகமாகும். அதை “oxidative stress” என்கிறோம். அதன் விளைவாக ‘ரியாக்டிவ் ஆக்சிடேஷன் ஸ்பீசிஸ்’ என்கிற ஒரு ரசாயனம் சுரக்கும். அது மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

நீரிழிவையும் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்துவதுடன் சீக்கிரமே முதுமையையும் கொடுத்துவிடும். இவ்வளவு மோசமான விளைவு களைக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு Anti oxidents என்பவை அவசியம். பிலிருபின், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் டி, தாமிரம், செலினியம், துத்தநாகம், ஆல்ஃபா லினோலிக் அமிலம் போன்ற எல்லாம் நம் உடலுக்குள்ளேயே இருந்து, இந்த பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை.

தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது. கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை இருந்தாலும் அதன் அறுவடையில் வித்தியாசப்படுகிறது.

ப்ளாக் டீ &கிறீன் டீ

பிளாக் டீ என்பது இரசாயனக் கலவையில் ஆக்சிஜனுடன் இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுகிறது.. ஆனால் கிரீன் டீ அவ்வாறு ஆக்ஸிஜனுடன் சேர்க்கப்படுவதில்லை. பிளாக் டீயில் 10% பாலிபீனால்களுள்ளது. கிரீன் டீயில் 40% பாலிபீனால்கள் உள்ளது.
கருப்பு தேநீர் (பிளாக் டீ ) பயன்கள்: கருப்பு தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சர்க்கரை அல்லது பால் போன்ற எந்தவொரு சேர்க்கையும் இல்லாமல் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

  1. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
  2. வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீயின் பங்கு அதிகமானது.
  3. இதில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
  4. பிளாக் டீயில் உள்ள ஒரு பதன பொருள் வைரஸிலிருந்து உடலை காத்து நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  5. பிளாக் டீயில் அமினோ ஆசிட் இருப்பதால் நமது கவனம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.
பிளாக் டீயின் குறைகள்:
  • ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக அருந்துவது உடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
  • அதிகமான பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் உறக்கம் பாதிப்படைகிறது.
  • அதுவும் வெறும் வயிற்றில் பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் வயிறு எரிச்சலடைந்து இரைப்பை பிரச்சனைகள் உருவாகும்.
க்ரீன் டீ பயன்கள்
  • இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • தங்கள் எடையை குறைக்க விரும்புவோர் கிரீன் டீயை அருந்துவது எளிதான வழி. இது தேவையற்ற கொழுப்பை எரிக்கிறது. உடல் திறனை அதிகரிக்கிறது.
  • கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால் புற்று நோய் அபாயத்தை இது தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்று நோய், பெருங்குடல்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.
  • கிரீன் டீயில் பாலிபீனால்கள் உள்ளன.இவை மூலக்கூறுகள்(molecules) மற்றும் செல்களை முறிவதிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.
  • தோல் சுருக்கங்கள், வயதான அறிகுறிகள் போன்றவை கிரீன் டீ அருந்துவதால் குறைகிறது.
கிரீன் டீ குறைகள்:
  1. கிரீன் டீயை ஒரு நாளைக்கு 5 கப்புகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிவை உண்டாகும் வாய்ப்புள்ளது.
  2. கிரீன் டீ நாம் உண்ணும் உணவிலுள்ள இரும்பு சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால், அதிகமாக கிரீன்டீ எடுத்துக் கொண்டால் இரும்பு சத்து குறைபாடு தோன்றும்.
  3. கிரீன் டீயில் காட்சின் (catechin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலின் பாதுகாப்பு செல்களை அவை அழிக்கின்றன. உணவை ஆற்றலாக மாற்றுவதை இது தடுக்கிறது. கிரீன் டீயை அதிகமாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நாள் முழுதும் தேநீரை சுவைப்பதை விடுத்து உடல் புத்துணர்ச்சிக்காக மட்டும் இதை அருந்துவதால் எந்த பிரச்னையுமில்லை.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website