கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மக்களுக்கு பண உதவி செய்த நடிகை ரோஜா -குவியும் பாராட்டு

December 23, 2023 at 9:03 am
pc

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநில அமைச்சராக இருக்கிறார் என்பதும் அவர் ஆந்திராவின் மிகச்சிறந்த அமைச்சர்களின் ஒருவராக விளங்கி வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏழை மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தா போல் வேடமணிந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ரோஜா இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் என்பதும் தற்போது அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில் நாகராஜ் என்ற மாற்று திறனாளி தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மனுவாக எழுதி ரோஜாவிடம் கொடுத்த போது ’கண்டிப்பாக எங்கள் குழு உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார்.இந்த நிலையில் நாகராஜ் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவருடைய வீட்டிற்கு கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் சென்ற அமைச்சர் ரோஜா, அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நாகராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.இந்த நிலையில் நாகராஜை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி அவருடைய மருத்துவச் செலவிற்கு ரூ.2 லட்சம் பண உதவி செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website