குடல் புழுக்களை அகற்ற வேண்டுமா? அப்ப இந்த எளிய இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..!!

March 6, 2023 at 6:49 am
pc

நம் அனைவரது உடலிலும் ஏதோ ஒரு வகையில் புழுக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த புழுக்களானது உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும், குடலிலேயே பெரும்பாலும் அதிகம் இருக்கும். இந்த புழுக்களானது ஒருவரது உடலில் அசுத்தமான நீரைக் குடிப்பது, சரியாக சமைக்காத இறைச்சிகளை உண்பது, போதுமான சுகாதாரத்துடன் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் நுழைகின்றன. உடலில் இருக்கும் புழுக்களை அவ்வபோது வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் அந்த புழுக்கள் உறிஞ்சி வாழும். இதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


ஒருவரது உடலில் புழுக்கள் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டு உடலில் புழுக்கள் அதிகம் இருப்பதை அறியலாம். இந்த குடல் புழுக்களை அழிக்க அதிர்ஷ்டவசமாக பல இயற்கை வழிகள் உள்ளன. இந்த வழிகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தால், குடலில் புழுக்கள் சேர்வதைத் தடுக்கலாம் மற்றும் இருக்கும் புழுக்களை திறம்பட அழிக்கலாம். இப்போது குடலில் புழுக்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளையும், அந்த குடல் புழுக்களை அழிக்க உதவும் சில இயற்கை வழிகளையும் காண்போம்.


குடல் புழுக்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் :
  • அடிவயிற்று வலி
  • அடிக்கடி வயிற்றுப்போக்கு
  • வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை
  • தூக்கமின்மை
  • திடீர் எடை இழப்பு
  • மிகுந்த சோர்வு
  • ஊட்டச்சத்து குறைபாடு
  • பற்களைக் கொறிப்பது
  • சரும அரிப்பு, முகத்தில் வெள்ளை திட்டுக்கள், முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள்
  • மன அழுத்தம் மற்றும் எரிச்சலுணர்வு
  • கருவளையம்
  • இரவில் அதிகமாக வியர்ப்பது
  • ஆசனவாய் அரிப்பு
    இப்போது குடல் புழுக்களை அழிக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
    பாகற்காய் :
    கசப்புத்தன்மை கொண்ட பாகற்காய் குடல் புழுக்களை திறம்பட அழிக்கும். அதற்கு வாரத்திற்கு ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டும். அதுவும் அந்த பாகற்காயை குழம்பாகவோ, பொரியலாவோ அல்லது வேறு எந்த வகையிலும் தயாரித்து சாப்பிடலாம். இப்படி உட்கொண்டு வந்தால், குடல் புழுக்கள் அழிவதோடு, உடலில் புழுக்கள் சேராமலும் இருக்கும்.
    சுண்டக்காய் :
    குடல் புழுக்களை அழிக்கும் மற்றொரு அற்புதமான கசப்புத்தன்மை கொண்ட காய்கறி தான் சுண்டக்காய். இந்த சுண்டக்காயை யார் ஒருவர் அடிக்கடி தங்களின உணவில் சேர்த்து வருகிறார்களோ, அவர்களது உடலில் குடல் புழுக்களே இருக்காது.
    அன்னாசி :
    ஆம், நல்ல மணத்தையும், சுவையையும் கொண்ட அன்னாசிப் பழமும் குடல் புழுக்களை திறம்பட அழிக்கும். நீங்கள் உங்கள் உடலில் உள்ள புழுக்களை எளிய வழியில் அழிக்க நினைத்தால், அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள் போதும்.
    விளக்கெண்ணெய் :
    குடல் புழுக்களை அழிக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் விளக்கெண்ணெய். நீங்கள் உங்கள் உடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற நினைத்தால், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் வயிறு நன்கு கலக்கிவிட்டு, குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
    பூண்டு :
    வீட்டில் உள்ள பூண்டு வயிற்றுப் புழுக்களை எளிதில் நீக்க உதவும். அதற்கு 2-3 பல் பூண்டை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, பூண்டுடன் பாலை உட்கொள்ள வேண்டும். அதுவும் இந்த பாலை காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் காலை வேளையில் குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
    வேப்பிலை :
    வயிற்றுப்புழுக்களை நீக்க உதவும் மற்றொரு இயற்கை பொருள் தான் வேப்பிலை. அதுவும் நல்ல கொளுந்து வேப்பிலையை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாங்ல, குடல் புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
    பப்பாளி விதை :
    உங்களுக்கு குடல் புழு பிரச்சனை உள்ளதா? உங்கள் வீட்டில் அடிக்கடி பப்பாளி வாங்கி சாப்பிடுவீர்களானால், அந்த பப்பாளியில் உள்ள விதைகளை தூக்கி எறியாமல், அதை உலர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் வயிற்றுப்புழுக்கள் அழிக்கப்படும்.
    ஓம விதைகள் :
    ஒரு டேபிள் ஸ்பூன் ஓம விதைகளை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, சிறிது நேரம் மூடி வைத்து, பின் அந்நீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். இப்படி செய்தால், குடல் புழுக்கள் அழிவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website