குடிப்பதற்காக பலான வேலையை பார்த்து வந்த வடிவேலு!

May 31, 2023 at 10:56 am
pc

வடிவேலு ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்பை நடித்து கொடுத்துவிட்டு ஓரமாக கைகட்டி வேடிக்கை பார்க்கும் நபராக சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். அதன் பின் விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவர் சினிமாவிற்கு எப்படி வந்தோம் என்பதை மறந்துவிட்டார்.

அதற்கு காரணம் இவருடைய தலைக்கனம். அத்துடன் பண போதை, நான் என்ற அகங்காரம், மற்றும் புகழ். இது அனைத்துக்கும் இவர் ஒருவரை சொந்தக்காரர் என்ற மினுக்குடன் இருப்பதால் மற்றவர்களை தரைக்குறைவாக பேசுவதும், கீழ்த்தரமாக நடத்துவதும் இவருடைய இயல்பான குணமாகவே மாறிவிட்டது.

அதனாலயே பல முன்னணி நடிகர்களை பகைத்துக் கொண்டார். அதில் முதல் கட்டமாக எப்பொழுது கேப்டன் விஜயகாந்த் இடம் இவருடைய அலப்பறையை ஆரம்பித்தாரோ அப்பொழுதே இவருக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். அதன் பின் தொடர்ந்து இவரை பல ரூபங்களில் சனி பிடித்து வாட்டி வதைக்கிறது.

இது மட்டுமில்லாமல் இவர் என்னெல்லாம் தில்லாலங்கடி வேலையே பார்த்து இருக்கிறார் என்று இவருடன் நடித்த சக நடிகர் இவரைப் பற்றி புட்டு புட்டு வைத்து வருகிறார். அதாவது இவர் நடிக்கும் படங்களில் உள்ள எல்லா தயாரிப்பாளரிடமும் இவருடைய அசிஸ்டன்ட், டச்சப், வண்டி மற்றும் டிரைவர் என அனைத்திற்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் பேட்டா காசு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொள்வார்.

தயாரிப்பாளரும் இவர் கேட்ட பணத்தை முழுவதுமாக கொடுத்து விடுவாராம். ஆனால் அதை இவர் பட்டுவாடா செய்யும்போது 100, 200 என்றுதான் பிரித்துக் கொடுப்பார். அப்படி ஒரு நாளைக்கு என்று அவர்களுக்கு 2000 ரூபாய் செலவழித்து விட்டு மீதமுள்ள 8000 ரூபாய் இவரை வைத்துக் கொள்வார். இந்த மீதி பணத்தை வைத்து தான் அவர் குடிப்பதற்கு வைத்துக் கொள்வார்.

இவருக்கு கொடுக்கிற சம்பளத்தை பத்திரமாக சேர்த்து வைத்துவிட்டு இந்த மாதிரி வர பணத்தை குடித்தே காலி பண்ணி விடுவார். அது மட்டுமல்லாமல் இந்த மாதிரியான பலான விஷயங்களை செய்து அவர் சந்தோஷத்தை அனுபவித்துக் கொள்வார். கடைசியில் இவரை நம்பி இருந்த நாங்கள் தான் ஒன்றும் இல்லாமல் போய் விட்டோம் என்று இவருடன் நடித்த மீசை ராஜேந்தர் அவருடைய கொந்தளிப்பை பகிர்ந்து வருகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website