குறட்டையை உடனே விரட்டணுமா .?குறட்டை தொல்லையில் இருந்து விடுபட இதோ சில டிப்ஸ்… !!

June 30, 2022 at 3:32 pm
pc

தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறைட்டை விட்டு தூங்கும் மனிதர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று நினைகிறோம். ஆனால், அது ஆரோக்கியாமான தூக்கம் கிடையாது; அது ஒரு மயக்க நிலை. இந்த குறட்டையால் அவர்களுடைய தூக்கமும் போயி, அருகில் இருப்பவர்களின் தூக்கத்தையும் தொலைந்து போய்விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டைவிடும் கணவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு விபரீதப் பிரச்சனையாக இருக்கிறது இந்த குறட்டை. பொதுவாக, பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் குறட்டைவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறட்டை ஆபத்தா?

இந்த விஷேச நாட்களில் உறவினர்கள் கூடும் வேளையில், குறட்டைவிடுபவர்களை கண்டாலே தெரித்து ஓடுவார்கள். அதுமட்டுமல்லாமல், குறட்டைவிடுபவர்களை எல்லாரும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் வேதனை அவர்களுக்கு தான் தெரியும்.

தினமும் தலைவலி, சோர்வு, வேலையில் நாட்டமின்மை, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனையை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், பக்கவாதம், சர்க்கரைநோய் போன்றவற்றிற்கு காரணியாக அமையலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறட்டை ஏன் ஏற்படுகிறது?

சுவாசப்பிரச்சனை, உடல்பருமன், மரபுவழி, தைராய்டு பிரச்சனை, புகைப்பிடிப்பது, தூக்க மாத்திரை, மனஅழுத்தம், பணிசுமை, உடலை வருத்திக் கொண்டு வேலை செய்தல், மரு அருந்துதல் போன்றவை குறட்டை ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website